
நடிகர் வேலராமமூர்த்தி இந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய நாவல்களில் குருதியாட்டம், பட்டத்து யானை உள்ளிட்டன புகழ்பெற்றது. இவர் ராணுவத்தில் பணிபுரிந்தும் உள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது சினிமா துறையில் துணை நடிகர்களில் முன்னணி நடிகராக உள்ளார். தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம், பாயும் புலி, கொம்பன், சேதுபதி, ரஜினி முருகன் போன்ற படங்களின் மூலம் மிகப் பிரபலமாகினார். இந்த நிலையில் சமீபத்தில் இவரது பேத்திக்கு நடைபெற்ற திருமணம் கோலிவுட்டையை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

வேலராமமூர்த்தி இன் பேத்தி வைஷ்ணவி திருநெல்வேலியில் உள்ள ஆர்.எஸ். முருகன் தொழிலதிபரின் மகன் விஜய ராகுலை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணத்தில் மணமக்கள் அணிந்த மாலை முதல் அனைத்தும் தங்கத்தால் ஜொலித்தது. இவர்கள் திருமணத்தில் இருந்த ஒட்டுமொத்த நகையும் குறைந்தது 600 சவரன் இருக்கலாம் என கூறப்படுகிறது. மணமகள் புடவையின் விலைமதிப்பு சுமார் 8 லட்ச ரூபாய் ஆகும். இந்த திருமணத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு நிகழ்வும் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.