கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின் படி போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மறவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றார். அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது நம்பர் பிளேட் பொருத்தாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்தது.

அது மட்டும் இல்லாமல் அதிக ஒலி எழுப்பும் சைலன்சருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். மேலும் மோட்டார் சைக்கிளின் நிறத்தையும் மாற்றி உள்ளார். இதனால் போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வாலிபருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.