
இங்கிலாந்து சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை மூன்று ஆண்டுகளாக படுக்கையின் டிராயரில் மறைத்து வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளாக குழந்தையை தனது கணவருக்கு கூட தெரியாமல் டிராயரில் வைத்து வளர்த்துள்ளார். கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதால் அவருக்கு குழந்தை பற்றி தெரிய வேண்டாம் என்பதற்காக அவ்வாறு செய்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.
அந்த குழந்தை ஊட்டச்சத்து குறைபாடோடு இருந்துள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார் குழந்தையை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த குழந்தைக்கு நடக்கவோ பேசுவோ, தவழவோ கூட தெரியவில்லை மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏழரை ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.