ஜப்பான் நாட்டின் ஒரு நகரில் 37 வயதுடைய நபர் அத்துமீறி மற்றவர்களின் வீட்டிற்குள் சென்றுள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதுவரை தான் ஆயிரம் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்ததாக சம்பந்தப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்படி அடுத்தவர்கள் வீட்டிற்குள் நுழைவது தனது மன அழுத்தத்தை குறைப்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, அது எனது பொழுதுபோக்கு. நான் அதை ஆயிரம் தடவைகளுக்கு மேல் செய்துள்ளேன். யாராவது என்னை கண்டு பிடிப்பார்களா இல்லையா என்று யோசிக்கும்போது என் உள்ளங்கைகள் வியர்த்து விடும். அந்த உணர்வினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என் மன அழுத்தம் குறைகிறது என வாக்குமூலம் அளித்துள்ளார். சோசியல் மீடியாவில் இந்த சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.