சாதனை படைக்க வயது தடை இல்லை என்று கூறுவார்கள். கனடாவில் டோனாஜின் வையில்டின் (59) என்பவர் வருகிறார். இவர் கடந்த வாரம் ஒரு மணி நேரத்தில் சுமார் 1575 புஷ் – அப்களை எடுத்துள்ளார். இது இவரது இரண்டாவது உலக சாதனையாகும். இவர் ஒவ்வொரு புஷ்-அப்பிற்கும், புஷ்-அப்பின் அடிப்பகுதியில் 90 டிகிரி முழங்கை அளவு மற்றும் மேலே தள்ளும்போது முழுக்கை நீட்டிப்பு தேவை நிபந்தனைகளுடன் இந்த சாதனையை படைத்தார். இவர் ஏற்கனவே புஷ்-அப்பில் உலக சாதனை படைத்திருந்தார்.

தற்போது ஏற்கனவே செய்த அந்த சாதனையை 17 நிமிடங்களுக்கு முன்னதாகவே முடித்துள்ளார். இதனால் அவர் தனது சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார். அவர் கூறியதாவது, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் என்னை மிகவும் வலுவாக உணர்ந்தேன். அடுத்து 17 நிமிடங்களில் அதிக எண்ணிக்கையிலான புஷ்-அப்களை முடிக்க இலக்கு வைத்துள்ளேன் என்றார். இவருக்கு 12 பேரக் குழந்தைகள் உள்ளன. இதுகுறித்து அவர் பேரக்குழந்தைகள் கூறியதாவது, எங்களின் பாட்டி மிகவும் அற்புதமானவர் என்றனர்.