
அமெரிக்க அதிபர் போட்டியில் வென்ற டொனால்ட் டிரம்ப் வருகிற ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அவர் தனது மந்திரிசபையில் இடம்பெற உள்ள மந்திரிகள் மற்றும் பல்வேறு உயர் பதவிகளுக்கான பெயர்களைப் பற்றி அறிவித்து வருகிறார். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலரும் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான (FBI) இயக்குனராக காஷ்யப் பட்டேல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவர். இதுகுறித்து டிரம்ப் அருகே ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் கூறியிருந்ததாவது காஷ்யப் ஒரு சிறந்த வழக்கறிஞர் மற்றும் புலனாய்வு அதிகாரி ஆவர். அவர் அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை கொண்டுள்ளார். ஊழலை எதிர்க்கவும், நீதியை காக்கவும், அமெரிக்க மக்களை பாதுகாக்கவும் அவர் உழைத்து வருகிறார் என்று தெரிவித்தார். தற்போது FBI இயக்குனராக இருக்கும் கிறிஸ்டோபர் கடந்த 2017 ஆம் ஆண்டு டிரம்பால் நியமிக்கப்பட்டவர் ஆவார். ஆனால் டிரம்ப் ஜோ பைடன் ஆட்சியில் அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்நிலையில் காஷ்யப் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளது கிறிஸ்டோபர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துகிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.