
ஒவ்வொரு ஆண்டும் வருடத்தின் கடைசி மாதம் வந்தாலே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கிவிடும். கிறிஸ்துமஸ் என்றாலே குழந்தைகளுக்கு சாண்டா கிளாஸ் பரிசு வழங்கிக் கொண்டாடுவது வழக்கம். கிறிஸ்துமஸ் தாத்தா என்றால் எல்லோருக்கும் நினைவு வருவது அடர்ந்த வெள்ளை தாடி, சிகப்பு நிற வெல்வெட் ஆடை, சிரித்த முகம், முதுமையான தோற்றம் ஆகியவை தான். கிறிஸ்தவ மதத்தில் சாண்டா கிளாஸ் ஒரு தேவ பிஷப்பாக கருதப்படுகிறார். சாண்டா கிளாஸ் இன் உண்மையான பெயர் சாண்டா நிக்கோலஸ். துர்கிஸ்தானில் உள்ள மயூரா நகரில் அடர்ந்த பனி நிறைந்த மலைகளுக்கிடையே பிறந்தவராக நம்பப்படுகிறது. பண்டிகை காலங்களில் நிக்கோலஸ் குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் விஞ்ஞானிகள் சான்டா நிக்கோலசின் மண்டை ஓட்டை வைத்து 3d முறையில் அவரது முகத்தை தடவியல் நிபுணர்கள் மூலம் உருவாக்கி உள்ளனர். இதுகுறித்து முதன்மை ஆய்வியல் ஆசிரியரான சீசரோ மோரேஸ் கூறியதாவது, தற்போது உருவாக்கப்பட்டுள்ள சாண்டா கிளாஸ் இன் உருவம் கடந்த 1823 புராணக் கதைகளில் கூறப்பட்ட சாண்டா கிளாஸ் இன் நினைவு கூறுகிறது. மிகவும் மென்மையான முகமுடைய நமது அனைவரது மனதிலும் பதிந்துள்ள சாண்டா கிளாஸின் முகத்தையே நினைவு படுத்துகிறது. 1950ல் லூயி மார்ட்டினோ வால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் சாண்டா நிக்கோலசின் மண்டை ஓட்டின் உருவ அமைப்பையும் கொண்டு சாண்டா கிளாஸ் இன் உருவம் அமைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.