கரூர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 இடங்களில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, மின்சாரம் கொள்முதல் விசாரணை தொடர்பாக அறிக்கையை வெளியிட்டோம். அதனை படித்த பிறகும் ஒருவர் புரிந்து கொள்ளாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார். புரியவில்லை என்றால் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை.
ஜாமீன் அமைச்சர் என கூறுகின்றனர். பிஜேபியில் எத்தனை பேர் ஜாமீனில் வெளி வந்திருக்கிறார்கள்? எத்தனை பேர் அமைச்சராக இருக்கிறார்கள் ? ஏழு ரூபாய் ஒரு காசு என்பது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு நிலவையில் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தடையாணை கேட்டோம். உச்சநீதிமன்றம் அதனை கொடுக்கவில்லை. ஆனால் அந்த நிதி விடுவிக்கப்பட்டது. ஏதோ எங்கள் அரசு ஒப்பந்தம் போட்டது போல தோற்றத்தை உருவாக்குகின்றனர்.
மூன்று ஆண்டுகளாக அதானி குடும்பத்தோடு எந்த தொடர்பும், தொழில் ரீதியாக எந்த தொடர்பும் வைக்கவில்லை என தெளிவாக கூறிவிட்டோம். ஆண்டு தோறும் பல ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகள் படிப்பதற்காக வெளிநாடு செல்கின்றனர். ஊடகங்கள் அதை குறித்து பேசுவது கிடையாது ஒரு நபரை மற்றும் செய்தி வெளியிடுகின்றனர். ஒன்றிய அரசு தேர்வு செய்து அனுப்பிய 11 நபர்களில் அண்ணாமலையும் ஒருவர். அவரோடு லண்டன் சென்ற ரோகிணி உள்ளிட்ட ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றி யாரும் பேசவில்லை. அண்ணாமலையை மட்டும் பெரிதுபடுத்தி பேசுகின்றனர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.