
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவர் ஜனசேனா கட்சியின் தலைவர். ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர். இந்நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. அவருடைய உதவியாளர் ஒருவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர் பவன் கல்யாணை கொலை செய்யப் போகிறோம் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
அதன் பிறகு தொடர்ந்து செல்போனுக்கு கொலை மிரட்டல்கள் குறித்த மெசேஜ் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பவன் கல்யாணுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பவன் கல்யாண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.