டெல்லியில் உள்ள ரஜோரி கார்டன் பகுதியில் ஒரு உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் நேற்று ‌ மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மள மளவென பற்றிய நிலையில் அங்கிருந்தவர்கள் கீழே இறங்க முடியாமல் மாடியில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் உதவி கேட்டு கூச்சலிடுகிறார்கள். இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு  தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.