
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஸ்ரீ பெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகள் அரைகுறையாக செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த பணிகளை உடனடியாக முடிப்பதோடு தடுப்பணைகளை கட்டித் தரவேண்டும் என்று கூறினார். அதன் பிறகு நான் அடுத்த முறை எம்எல்ஏ ஆவது அமைச்சர் துரைமுருகன் கையில் தான் இருக்கிறது என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன் செல்வப் பெருந்தகை அடுத்த முறை அமைச்சராவது என்னுடைய கையில் தான் இருக்கிறது என்று நகைச்சுவையாக கூறிய நிலையில் அந்த பணிகளை உடனே முடித்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்தார். மேலும் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய தடுப்பணைகள் கட்டித் தரவேண்டும் என்பது நேற்றும் சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் இன்றும் அந்த கோரிக்கை தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.