
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹௌராவில் காதலன் காதலியை மிரட்டியதால் ஆத்திரத்தில் அவரின்அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது இந்த பகுதியில் அப்துர் ரகுமான் என்ற வாலிபரும், சௌமியா கட்டூன் என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் சமீப காலமாக அந்த காதலன் தன் காதலியை தனியாக இருந்தபோது எடுத்த போட்டோவை வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். தொடர்ந்து தன் காதலன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சி செய்ததால் ஒரு கட்டத்தில் அந்த பெண் மிகுந்த கோபம் அடைந்தார். இதனால் ஆத்திரத்தில் தன் காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டி எடுத்துள்ளார். தன்னுடைய காதலன் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால் அவரை வரவழைத்து ஒரு மரத்தில் கட்டி வைத்து அந்தரங்க உறுப்பை வெட்டி எடுத்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சௌமியா கட்டூன் என்ற அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த வாலிபருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சௌமியா தன் காதலனை திருமணம் செய்து கொள்ள விரும்பிய நிலையில் அவரோ திருமணம் செய்து கொள்ளாமல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் தான் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத சௌமியா தன் வீட்டிற்கு காதலனை வரவழைத்து சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறி ஒரு மரத்தில் கட்டி வைத்து காதலனின் கண்களையும் கட்டி வைத்து பின்னர் அந்தரங்க உறுப்பை வெட்டி எடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.