
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் அருகே சிபின் என்ற 27 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் இன்ஜினியரிங் (BE) முடித்துள்ளார். இவர் படிப்பு முடிந்த நிலையில் நீண்ட நாட்களாக வேலை தேடி வந்துள்ளார். ஆனால் அவருக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததாக கூறப்படுகிறது. இவர் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
வீட்டில் தன் தந்தையிடம் தனக்கு படிப்புக்கு ஏற்ற வேலை மற்றும் நல்ல சம்பளம் கிடைக்கவில்லை என்று கூறி வாலிபர் புலம்பியுள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.