சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே தனியார் பல்பொருள் அங்காடி ஒன்று உள்ளது. இந்த சந்தான ராஜன் என்பவரின் மகன் ருத்ரப்பிரியன் மற்றும் சுஜித் மண்டல் என்பவரின் மகள் அகான்ஸா மண்டல் ஆகியோர் கப் நூடுல்ஸ் வாங்கியுள்ளனர். இதனை 166 ரூபாய் கொடுத்து அவர்கள் வாங்கிய நிலையில் வீட்டிற்கு சென்று சமைத்து சாப்பிட்டனர். அப்போது வாந்தி மற்றும் குமட்டல் போன்றவைகள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக தன் தந்தையிடம் சிறுவர்கள் நடந்ததை கூற அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

பின்னர் கப் நூடுல்ஸ் காலாவதியானது தெரியவந்தது. அதாவது அது ஆகஸ்ட் மாதமே முடிவடைந்த நிலையில் அதனை சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்து நிலையில் சம்பந்தப்பட்ட கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..