
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழுவு பகுதி உருவான நிலையில் அது வலுப்பெற்றுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.