மத்திய அரசு தற்போது பான் 2.0 என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உங்கள் பழைய பான் கார்டு எண்ணை QR குறிப்பிட்டுடன் புதிய பான் எண்ணுக்கு மாற்றலாம். இது மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. இதனை மாற்ற ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். அதனை நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பான் கார்டு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும். பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் ttps://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு உங்களுக்கு தேவையான பான் ஆதார் போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும். அதன்பின் Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும். உடனே ஒரு புதிய வலைப்பக்கம் திறக்கும், அதில் வருமானவரித்துறையுடன் புதுப்பிக்கப்பட்ட தற்போதைய விவரங்களை நீங்கள் சரிபார்க்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் ரிஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணுக்கு அல்லது மின்னஞ்சல் ஐடிக்கு OTP அனுப்பப்படும்.

இந்த OTP 10 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும். OTP நம்பரை உள்ளிட்டு Verify என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் பணம் செலுத்தும் விருப்பம் வரும், அதில் நீங்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும். அதன் பின்னர் டிக் பாக்ஸை கிளிக் செய்து விட்டு, Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு நீங்கள் 24 மணி நேரத்திற்கு பிறகு NSGL இணையதளத்திலிருந்து, E-பான் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய பான் கார்டு 15 முதல் 20 நாட்களுக்குள் உங்களுடைய முகவரிக்கு அனுப்பப்படும்.