சென்னை மாவட்டத்தில் எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி  ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஹோட்டலில் வாங்கிய பிரியாணி மற்றும் கிரில் சிக்கனில் புழு இருந்ததாக கூறி இரண்டு வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர்.  அவர்கள் ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று உணவு மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த ஹோட்டலை மூடவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.