
சென்னையில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, விஜய் மற்றும் சீமான் ஆகியோரால் உரசி பார்க்க கூட முடியாத இரும்பு இயக்கமாக திமுக இருக்கிறது. தமிழ்நாட்டை ராமர் பூமியா இல்ல ராமசாமி பூமியா என்று கேட்டால் நாங்கள் ராமசாமி பூமி தான் என்று கூறுவோம். இங்கு ராமருக்கு இடமில்லை. அதற்கு சாட்சி தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்றது.
அம்பேத்கர் படத்துக்கு ஒரு நாள் பூ போட்டு போஸ் கொடுத்து விட்டால் விஜய் என்ன பெரிய வாழும் அம்பேத்கரா.? அம்பேத்கர் பல்கலைக்கழகம், சட்டக் கல்லூரி மற்றும் அம்பேத்கர் உருவத்தை ஒரு ரூபாய் நாணயத்தில் பொறிக்க அரும்பாடுபட்டவர் கலைஞர் கருணாநிதி. மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருணாநிதியின் பேரன் ஸ்டாலினின் மகன் என்பதை தாண்டி தற்போது சனாதனத்தை எதிர்க்கும் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துள்ளார் என்று கூறினார்.