பீகார் மாநிலத்தில் கடந்த இரு வருடங்களாக பகட்வா விவாகம் அதிகரித்து வருகிறது. அதாவது அந்த மாநிலத்தில் அரசு மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் என நன்றாக படித்து வேலையில் இருக்கும் இளைஞர்களை கடத்தி சென்று பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது தான் பகட்வா விவாகம். அரசு வேலையில் இருப்பவர்களை கடத்தி சென்று துப்பாக்கி முனையில் அவர்களை மிரட்டி தங்களுடைய பெண்ணுக்கு தாலி கட்ட சொல்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது. அதாவது ஒரு நீதிமன்றத்தில் லவ் குஷ் என்பவர் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவ நாளில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் சிலர் அவரை கடத்தியுள்ளனர். பின்னர் துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி ஒரு பெண்ணுக்கு தாலி கட்டக்கூறிய நிலையில் அவரும் உயிருக்கு பயந்து போய் தாலி கட்டிவிட்டார். மேலும் இது தொடர்பாக அவர் புகார் கொடுத்துள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.