நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசியல் சாசனம் ‌ நிறைவேற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து சிறப்பு உரையாற்றி வருகிறார். அவர் பேசியதாவது, கடந்த 75 வருடங்களில் இந்தியாவின் முன்னேற்றம் என்பது அளப்பரியது. விரைவில் உலகில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா கண்டிப்பாக வளர்ச்சி அடைந்த ஒரு மாநிலமாக மாறிவிடும். உலக அளவில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது.

அதன் பிறகு எமர்ஜென்சி காலத்தின் பிறகு இந்தியாவின் உரிமைகள் சூறையாடப்பட்டது. நாடு சிறைச்சாலையாக மாறியது. காங்கிரஸின் இந்த பாவத்தை ஒருபோதும் துடைக்க முடியாது என்று கூறினார். அதன் பிறகு அரசியலமைப்பில் முதலில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கியது இந்தியா தான். அனைத்து விதமான முக்கிய திட்டங்களும் நாட்டில் பெண்களை மையப்படுத்தி தான் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்காவிடில் நாடு முன்னேறாது என்றும் ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்றும் கூறினார்.