நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் மதுரையில் சென்று பார்த்தபோது அங்கு சாலைகளே கிடையாது எல்லாம் சவக்குழிகள் தான். இந்த நிலத்தை 60 வருடங்களாக திமுக மற்றும் அதிமுக தான் ஆண்டு வருகிறது. சென்னையில் மழை நீர் வடிவதற்கு 2500 கோடி வேண்டும் என்கிறார்கள். இதற்காக எத்தனை ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார்கள் என்று நினைக்கிறீர்கள்.

ஆனால் இங்கு திமுக 4000 கோடி கொண்டு வந்துள்ள நிலையில் 2000 கோடியில் சென்னையில் அழகாக தண்ணீர் வெளியேறுகிறது. நீங்கள் அந்நிய முதலீட்டை இருப்பதற்காக எத்தனை நாடுகளுக்கு செல்கிறீர்கள். அரபு நாடுகள், சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மழை பெய்வது கிடையாதா. அங்கெல்லாம் சாலைகளில் தண்ணீர் தேங்காமல் மக்கள் பாதிக்காத அளவுக்கு மழை நீர் எப்படி வெளியேற்றப்படுகிறது என்பதை பார்ப்பதில்லையா. எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அவலம் நீடிக்கும்.

வெள்ளத்தில் மிதந்தானா அல்லது வீடு இடிந்ததா என்று கேட்டு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து முடித்து விடுகிறார்கள். இதெல்லாம் ஒரு ஆட்சி முறையா இல்லனா இதுதான் தீர்வா. சென்னையில் 2500 கோடி ரூபாய் ஒதுக்கி மழைநீர் தேங்காமல்  அளவுக்கு நடவடிக்கை எடுத்தால் போதும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இது ஒரு சாதாரண அடிப்படையாக இருக்கும் நிலையில் மழை நீர் மற்றும் கழிவு நீர் ஓடுவதை தடுப்பதற்கு ஒரு கால்வாய் வெட்ட கூட துப்பில்லை. நீ எதுக்காக மெட்ரோ போடுற. உன்கிட்ட வெள்ளம் போகறதுக்கு கால்வாய் வெட்ட சொன்னா நீ கார் ஓடவும் ரயில் ஓடவும் கால்வாய் வெட்டிட்டு இருக்க.

தம்பி உதயநிதி ஒரு பதிவு போடுறாரு. ஆண்டுதோறும் இந்த பிரச்சனைதான் இந்த பிரச்சினையை நிரந்தரமாக ஒழிக்க முடியாதா என்கிறார். உங்களை  நிரந்தரமாக ஒழித்தாலே இந்த பிரச்சனையும் முடிந்து விடும். நீர்நிலைகளை ஆக்கிரமித்தால் வீடுகளை இடிக்கும் இந்த அரசு பள்ளிக்கரணை ஏரியை குப்பைகளை கொட்டி ஆக்கிரமித்துள்ளது என்னவென்று சொல்வது. மேலும் என்னிடம் ஒரு 5 வருடம் மட்டும் ஆட்சியை கொடுங்க. எங்கையாவது மழைநீர் தேங்கியது  அப்படின்னா நான் ஆட்சியை விட்டேன் விலகிவிடுகிறேன் என்று கூறினார்.