
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்கழு கூட்டம் நேற்று நடைபெற்ற போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது, மக்கள் பிரச்சினைகளுக்காக மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டும். திமுக பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதிமுக ஆட்சியில் தான் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. அதிமுக ஆட்சியில் தான் டெல்டாவை பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் பல்வேறு நல்ல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் எந்த திட்டமும் அறிமுகப்படுத்தப்படாமல் மக்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள்.
அதிமுகவின் ஆட்சி நிறைவுக்கு வரும்போது தமிழ்நாட்டின் கடன் 5 கோடியாக இருந்த நிலையில் தற்போது திமுக ஆட்சிக்காலத்தில் அது பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தேவையா.? திமுக ஒரு விளம்பர அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. திமுக வாக்குறுதிகளில் இதுவரை 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கி ஊழல் செய்கிறார்கள். இதற்கெல்லாம் அடுத்து வரும் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும். நெருக்கடி கொடுக்க கொடுக்க அதிமுக வளர்ந்து கொண்டுதான் இருக்கும். மேலும் அதிமுகவில் எழுச்சி ஏற்பட்டு விட்டதால் இதுதான் வெற்றிக்கு அடிப்படையாக அமையப்போகிறது என்று கூறினார்.