
திருச்சி மாவட்டத்தில் டாட்டூ சென்டரில் நாட்டிற்கு ஆபரேஷன் போன்ற இயற்கைக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வாலிபர்கள் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைதளங்களில் பலரும் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இந்த நிலையில் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரன், ஜெயராமன் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.