
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் உள்ள எஸ்பிபி காலனியில் சமாதானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 65 வயது ஆகும் நிலையில் விசைத்தறி தொழிலுக்கு செல்கிறார். இவர் தினந்தோறும் வேலை முடிந்த பிறகு பூட்டி இருக்கும் கடைகளுக்கு முன்பு படுத்து தூங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய வேலை முடிந்த பிறகு வழக்கம் போல் ஒரு பூட்டி இருந்த கடைக்கு முன்பாக படுத்து தூங்குகிறார்.
அப்போது அங்கு இரண்டு வாலிபர்கள் இரவு நேரத்தில் வருகிறார்கள். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த வாலிபரின் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு காசு இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். இதனால் அந்த முதியவர் விழித்துக் கொண்ட நிலையில் அவரிடம் காசு கேட்க அவரோ தன்னிடம் இல்லை என்று கூறுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் அந்த முதியவரை கொடூரமான முறையில் அடித்து தாக்குகிறார்கள். அவர் வேண்டாம் என்னை விட்டு விடுங்கள் வலிக்குது என்று கதறுகிறார். ஆனாலும் அந்த கொடூர வாலிபர்கள் முதியவரை விடாமல் அடிக்கிறார்கள். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
இவர்களின் மாவு கட்டு வீடியோக்காக ஆவலோடு எதிர்பார்க்கிறேன் 😡😡😡@tnpoliceoffl இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏#Namakkal #TamilNadu #namakkaldistrictnews #Namakkal_Oldman_Attackpic.twitter.com/tuVskxiEni
— Praveen TVK 👑 (@its_PraveenRam) December 16, 2024