
குகேஷ் மற்றும் டிங் லிரன் இடையே உலக செஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் இதில் தமிழக வீரரான குகேஷ் இளம் வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இந்தப் போட்டி சிங்கப்பூரில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் இடம் பெற்றுள்ள செஸ் காய்கள் அமிர்ததரசில் மிகக் கடினமான வேலைப்பாடுகளால் செதுக்கப்பட்டவை.
இந்த காய்களை அமிர்ததரசில் உள்ள இந்திய கைவினைஞர் பல்ஜீத் சிங் என்பவரால் மிகவும் நுணுக்கமாகவும், பளபளப்பாகவும் செதுக்கப்பட்டது. இந்த கைவினை வெளிப்பாடுகளில் இவருக்கு 32 வருட அனுபவம் உள்ளது. மிகக் கடினமான வேலைப்பாடுகளை தேர்ந்தெடுத்து செதுக்குபவர்களில் பல்ஜித்தும் முக்கியமானவர். உலகச் செஸ் சாம்பியன்ஷிப் காண கே நைட்(k night) செஸ் காய்களை செதுக்கும் தலைசிறந்த சிற்பிகள் இருவர்களில் இவர் ஒருவர் ஆவார்.