
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது கேண்யாவை சேர்ந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் போதைப் பொருளான கொக்கையினை தனது வயிற்றில் வைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 14.2 கோடி ரூபாய் மதிப்பிலான 1,424 கிராம் கொக்கையினை அந்தப் பெண் டியூப் மாத்திரை போன்ற வடிவில் தனது வயிற்றில் மறைத்து கடத்த முயற்சித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.