நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் கடந்த நான்கு நாட்களாக இந்திய அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லி இருந்தால் அடுத்த 7 ஜென்மத்திற்கு  சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக் கொள்வதில் பாஜக மகிழ்ச்சி அடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் கட்சி பேச வேண்டும் என கூறினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும். அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம். வாழ்க அம்பேத்கர். அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும் என பதிவிட்டுள்ளார்.