தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று நாளை முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்க கடலின் வடக்கு பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்க்கூடும்  என்பதால் மீனவர்கள் யாரும் இந்த பகுதிகளுக்கு இன்று மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.