துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, உலகமே கொண்டாடும் பண்டிகை நம்முடைய கிறிஸ்மஸ் விழா என்று கூறி கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வாழ்த்துக்களை கூறுகிறேன். நான் டான் பாஸ்கோ பள்ளியில் படித்த நிலையில் லயோலா கல்லூரியில் படித்தேன். இதன் மூலம் நானும் ஒரு கிறிஸ்தவன் என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன். என்னை நீங்கள் கிறிஸ்தவனாக நினைத்தால் நான் கிறிஸ்தவனாகவும், என்னை நீங்கள் முஸ்லிமாக நினைத்தால் நான் ஒரு முஸ்லீமாகவும், என்னை நீங்கள் ஒரு இந்துவாக நினைத்தால் நான் ஒரு இந்துவாகவும் இருப்பேன் என்றார். நான் எல்லோருக்கும் பொதுவானவன். எல்லா மதங்களும் அடிப்படையில் அன்பை மட்டும் தான் போதிக்கிறது.

ஆனால் அதே மதத்தை வைத்து ஒரு சிலர் அரசியல் செய்கிறார்கள். அவர்கள் சமூக வலைதளங்கள் உட்பட அனைத்திலும் பொய்யை மட்டுமே பரப்பி வரும் நிலையில் சமீபத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய நிலையில் நீதிபதிகளே இப்படி இருந்தால் எப்படி நீதி என்பது கிடைக்கும். இப்படி மதரீதியாக பேசிய நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் திமுக தீர்மானம் கொண்டு வந்த நிலையில் அதனை அதிமுக ஆதரிக்கவில்லை. மேலும் கிறிஸ்தவ மக்களின் கோரிக்கைகள் முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் 2026 தேர்தலிலும் உங்கள் ஆதரவு திமுகவுக்கு தான் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.