
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் அவர்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா இழிவுபடுத்தும் விதத்தில் பேசியதாக கூறி பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் மநீம கட்சியின் தலைவரான கமலஹாசன் அவர்கள் X வலைத்தள பக்கத்தில் நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர எங்களைப் போன்று பெருமிதத்துடன் அம்பேத்கரை பின்பற்றுபவர்களை புண்படுத்துவதாக இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
https://x.com/ikamalhaasan/status/1869582128255488381