
தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. அதுதான் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டம். இந்தத் திட்டத்தை குறித்து தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திட்டம் 1976 ஆம் ஆண்டு கலைஞரால் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு 1051.34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது மேலும் 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டிற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வீடுகள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2030ம் ஆண்டிற்குள் மொத்தம் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர தமிழ்நாடு அரசு இலக்கு வைத்துள்ளது. குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலம் வைத்திருப்பவர்கள், இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம். ஆனால் கான்கிரீட் மற்றும் மண் சுவர் மூலமாக வீடு கட்டி இருப்பவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குடிசை வீடுகளில் வசிப்பவர் ஆகவும், சொந்தமான பட்டா நிலம் வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.