நைஜீரியா நாட்டின் ஓயோ மாகாணத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் New Year பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு பரிசுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.

கலை நிகழ்ச்சிகளை பார்க்கவும் பரிசுகளை வாங்கவும் ஏராளமானோர் கூடியதால் கூட்ட நெரிசில் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.