
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இஸ்ரேல் – காசா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வடக்கு காசாவை முற்றுகையிட்டு இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இதில் அல் ஆலி அரப் மருத்துவமனை தாக்கப்பட்டு அதிலிருந்து குழந்தைகள் மற்றும் மருத்துவர் என 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இஸ்ரேல் இந்த பகுதியை ஆக்கிரமித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் மக்கள் பசி பட்டினியால் அவதிப்படுகின்றனர். ஐநா அமைப்பால் கூட நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.