சென்னையில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி 1.3 கிலோ 1.2 கிலோ எடையுடைய ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகள் பிறக்கும்போதே அபாய கட்டத்தில் இருந்தது. உடனே மருத்துவ குழுவினர் இரட்டை குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

அவர்களது முயற்சியால் உயிர் பிழைத்த இரட்டை குழந்தைகள் 50 நாட்களுக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பெற்றோர் தங்களது இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்த நாளை மருத்துவமனையில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான போட்டோஸ் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.