நாட்டின் முதல் மேம்பாலத்தை வடித்த சிரீஸ் படேல் காலமானார். இவருக்கு 92 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தார். இவர் கடந்த 1932 ஆம் ஆண்டு கராச்சியில் பிறந்த நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மும்பைக்கு குடியேறினார்.

இவர் ஒரு சிவில் இன்ஜினியர். இவர் கடந்த 1965 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள கெம்ப் கார்னர் பகுதியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை வடிவமைத்தவர். இதேபோன்று நவி மும்பையின் வளர்ச்சி பணிகளிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார். மேலும் இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு காலமானார். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.