
தமிழகத்தில் பொது இடங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பவர்களுக்கு நிவாரண தொகை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பொது இடங்களில் மின்விபத்துகளால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக மின்சார வாரியம் சார்பில் 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
இந்த நிவாரணத் தொகையை தற்போது 5 லட்சத்திலிருந்து 10 லட்ச ரூபாயாக அரசு உயர்த்தி உள்ளது. அதன் பிறகு முழு கண் பார்வை இழப்பு, 2 கை கால்களும் செயலிழத்தல் போன்றவைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையும் 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு கை மற்றும் கால் செயலிழந்தால் 1.50 இலட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.