திருநெல்வேலியில் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக விசாரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும் கொலையை தடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பணி நேரத்தில் செல்போனில் போலீசார் மூழ்கி கிடப்பதாக வேதனை தெரிவித்தனர். அதன் பிறகு நீதிமன்றத்தின் முன்பாக கொலை நடந்த போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் டிஜிபி சங்கர் ஜிவால் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது அதாவது இனி தமிழக முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பிஸ்டலுடன் எஸ்ஐ மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகு கை துப்பாக்கி மற்றும் நீண்ட தூரம் குறி வைத்து ‌ சுடும் துப்பாக்கிகளை வைத்திருக்கவும், இது தொடர்பாக நாளை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவு காவல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.