
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே நெலமங்கலாவில் நேற்று கார் மீது கண்டைனர் லாரி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 5 பேரும், பைக்கில் சென்ற ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் காரில் பயணித்தவர்கள் டெக் சிஇஓவான சந்திரம் யெகாபகோல்(46) என்பவரும் அவரது குடும்பத்தினரும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் Last சாஃப்ட்வேர் சொல்யூஷன் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
சம்பவத்தன்று பல டன் எடைக்கொண்ட அலுமினிய தூண்களை ஏத்திச் சென்ற லாரி ஒன்று பெங்களூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற மற்றொரு வாகனத்தின் மீது மோதாமல் இருக்க லாரி ஓட்டுநர் முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி பாதையை விட்டு விலகி, மீடியனைக் கடந்து சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்று கொண்டிருந்த காரின் மீது மோதியது. இதில் கார், லாரிக்கு அடியில் சிக்கி நசுங்கியது. சந்திரன் தனது பூர்வீக கிராமத்தில் உடல் நலக்குறைவாக இருக்கும் தனது தந்தையை பார்க்க சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.