
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பச்சபனட்டி கிராமத்தில் 27 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் செங்கல் சூலையில் வேலை பார்க்கிறார். இந்த நிலையில் கணவரை இழந்த ஒரு பெண்ணை குளித்து தொழிலாளி இரண்டாவதாக திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. கடந்த சில நாட்களாக முதல் கணவருக்கு பிறந்த 13 வயது சிறுமி உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டார்.
இதனால் சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்தபோது வளர்ப்பு தந்தை என கூலி தொழிலாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கூலி தொழிலாளியை கைது செய்தனர்.