கர்நாடக மாநிலம் உடுப்பியில் அப்துல் ரசித்(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோடேஷ்வர் அருகே உள்ள ஒரு டயர் கடையில் பஞ்சர் பார்க்கும் வேலையை பார்த்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 21ம் தேதி “Bearis Seaside Public School” என்ற ஒரு பள்ளி பேருந்தின் டயர் பஞ்சர் ஆனதால் இந்த கடைக்கு கொண்டு வந்துள்ளனர். அப்போது அந்த சிறுவன் அந்த டயருக்கு முதலில் காத்து அடித்துள்ளார்.

அதன் பின் சிறிது நேரத்தில் அந்த டயர் வெடித்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதனால் அவரது கையில் பலத்த காயமடைந்தது. இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.