
பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இறுதித் தேர்வில் தோல்வியடைவோர் 2 மாதத்தில் மீண்டும் மறுதேர்வு எழுதலாம். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல் வகுப்புக்கு செல்ல முடியும் என தகவல் வெளியாகியுள்ளது. மறுதேர்விலும் தோல்வி அடையும் மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும்.
எனினும், மாணவர்கள் 8ம் வகுப்பு வரை பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவை ஏற்று புதுச்சேரி அரசு செயல்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி அளித்துள்ளார்.