
கடந்த 12 ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள ஜெயின் பீட்டர்ஸ் பெர்க் நகரத்திலிருந்து இருந்து சரக்கு கப்பல் ஒன்று விளாடிவொஸ்டோக் நகரத்திற்கு புறப்பட்டது. அந்த கப்பல் கடந்த 22 ஆம் தேதி சர்வதேச கடற்பரப்பில் மத்திய தரை கடலில் சென்று கொண்டிருந்தபோது எஞ்சின் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த தீயானது கப்பலின் மற்ற பகுதிகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. அந்த சமயத்தில் கப்பலில் 16 மாலுமிகள் இருந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து ஸ்பெயின் கடற்படையினரும் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மற்ற கப்பல்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு 14 மாலுமிகளை உயிருடன் மீட்டனர்.
மற்ற இரண்டு மாலுமிகள் கடலில் விழுந்ததால் அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட கப்பல் கடலில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.