
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் எக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. ட்விட்டர் செயலியை எலான் மஸ்க் வாங்கிய பிறகு எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்தார். அதன் பிறகு அந்த செயலியில் பல்வேறு மாற்றங்களை அவர் கொண்டு வந்த நிலையில் ப்ளூ டிக் முறைக்கும் கட்டணம் வசூலித்தார். இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தற்போது இந்த தளத்தில் இலவசம், பிரீமியம் மற்றும் பிரிமியம் பிளஸ் ஆகிய சேவைகள் தனித்தனியாக வழங்கப்பட்டு வருகிறது.
இதில் பிரிமியம் மற்றும் ப்ரீமியம் பிளஸ் என்பது கட்டணம் முறை. இதில் பிரிமியம் பிளஸ் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தற்போது மஸ்க் அறிவித்துள்ளார். அதன்படி இதற்கான மாத கட்டணம் 1300 ரூபாயிலிருந்து 1700 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று இதற்கான ஆண்டு கட்டணம் 13 ஆயிரத்து 600 ரூபாயிலிருந்து 18,300 ஆக உயர்த்தியுள்ளார். இது பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.