உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்ட தொடங்கிவிட்டது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையை இந்தியாவிலும் சிறப்பான முறையில் கொண்டாடுவார்கள். இன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும் நிலையில் பரிசு பொருட்கள் மற்றும் கேக் வழங்கி கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி மற்றும் சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும். மேலும் அனைவருக்கும் என் அன்பான இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் முன்னதாக விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு மட்டும் விஜய் வாழ்த்து சொல்லாதது சர்ச்சையாக மாறிய நிலையில் பின்னர் அவர் அடுத்தடுத்து வந்த விஜயதசமி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறினார். இதைத்தொடர்ந்து தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளது கவனத்தை ஈர்த்ததுள்ளது.