சென்னையில் பாஜக சார்பில் வாஜ்பாய் பிறந்த தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். நாங்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக திட்டங்கள் வகுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இங்கு பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை இருக்கிறது.

தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நேற்று நான் தொலைக்காட்சியில் பார்த்த போது  வீரமணி ஒரு கைத்தடியை முதல்வருக்கு வழங்குகிறார். இது திராவிட மாடலின் அடையாளம் என்று கூறி முதல்வர் சந்தோஷப்பட்டார். ஆனால் இன்று நான் சொல்கிறேன். தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு ஒரு கைத்தடி தேவைப்படுகிறது. மேலும் அதனால் தான் வீரமணியே முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார் என்றார்.