திருப்பூரில் இருந்து நோயாளி உட்பட 6 பேரை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று சென்னை நோக்கி சென்றது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் பயணித்த நோயாளி உட்பட 6 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த 6 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டது.