
திருச்சி மாவட்டத்தில் உள்ள பொட்டவாய்த்தலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார். இவருக்கு 52 வயது ஆகிறது. இந்நிலையில் எஸ்ஐ செந்தில்குமார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
அந்த பேருந்து வேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் செந்தில்குமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.