கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழகடியப்பட்டினம் பகுதியில் ஹார்லின் டேவிட்சன்(15) என்பவர் வசித்து வருகிறார். இவர் மணவாளக்குறிச்சியில் இருக்கும் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது விடுமுறை என்பதால் டேவிட்சன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு அருகில் இருக்கும் கடலில் குளிப்பதற்காக சென்றார்.

அப்போது ராட்சத அலையில் சிக்கி டேவிட்சன் உள்பட 3 சிறுவர்கள் இழுத்து செல்லப்பட்டனர். இதனை பார்த்ததும் மீனவர்கள் இரண்டு சிறுவர்களை காப்பாற்றிவிட்டனர். ஆனால் டேவிட்சனை காப்பாற்ற முடியவில்லை. அதன்பிறகு டேவிட்சன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.