முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் உயிரிழந்தார் அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இன்று அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. மன்மோகன் சிங்கின் உயர்ந்த தொண்டையும், அவரது சீக்கிய சமூகத்தையும் நேரடியாகவே அவமதிக்கும் செயலாகும். இறுதிச் சடங்கு நிகழ்வைச் சாதாரணமாக நிகம்போத் காட்-இல் வைத்து நடத்தியிருப்பது ஆணவத்தையும், பாரபட்சத்தையும் காட்டுகிறது.

மன்மோகன் சிங்கின் பெரும் பங்களிப்புகளை மக்களின் நினைவில் இருந்து அகற்ற முனையும் அப்பட்டமான முயற்சியாகும். அவரது தலைமையில் இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியமைத்துக் கோடிக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்தார். இத்தகைய உயர்ந்த தலைவரை அவமதிப்பது என்பது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதற்குச் சமமாகும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவிடம் – அவரது குடும்பத்தாரின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.