நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தவறு செய்தவர்கள் தான் சாட்டையால் அடித்துக் கொள்ள வேண்டுமே தவிர தன்னைத்தானே வருத்திக்கொள்வது தேவையற்றது என்று அண்ணாமலைக்கு அட்வைஸ் செய்தார். பின்னர்பாமகவில் குடும்ப அரசியல் கிடையாது எனவும் அங்கு வெறும் முரண்பாடுகள் மட்டும் தான் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். அதோடு ராமதாஸ் தன்னிடம் கட்சியை பல பேரிடம் கொடுத்துப் பார்த்ததாகவும் ஆனால் எதுவும் சரிப்பட்டு வராததால் வேறு வழியில்லாமல் தான் அன்புமணியிடம் கட்சியை கொடுத்ததாகவும் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு திருச்சி எஸ் பி வருண்குமாருக்கும் தனக்கும் எந்த விதமான பிரச்சினையும் கிடையாது என்றும் கூறினார்.

மேலும் பாமக கட்சியில் அன்புமணி தன்னுடைய அக்கா மகனுக்கு  இளைஞர் அணி பொறுப்பை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ராமதாஸ் அவருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் தந்தை மகன் இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில் பின்னர் நேற்று இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிலையில் தான் பாமக கட்சியில் குடும்ப அரசியல் என்பது இல்லை என சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.